தேவேந்திர பட்னாவிசுக்கு மும்பை போலீசார் நோட்டீஸ்

தொலைபேசி ஒட்டு கேட்பு வழக்கில் தேவேந்திர பட்னாவிஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.;

Update:2022-03-12 22:59 IST
கோப்பு படம்
மும்பை,  
பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஆண்டு சட்டசபையில் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் இதுதொடர்பாக மாநில உளவுப்பிரிவு தலைவராக இருந்த ராஷ்மி சுக்லா, அப்போதைய டி.ஜி.பி.க்கு அனுப்பிய தொலைபேசி ஒட்டுகேட்பு குறித்த கடிதத்தையும் வெளியிட்டார். 
இந்த நிலையில் அரசின் ரகசியங்களை கசிய விட்டதாக ஐ.பி.எஸ். அதிகாரி ராஷ்மி சுக்லா மீது மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக தேவேந்திர பட்னாவிசுக்கு மும்பை போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். அதில் ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளனர். 
வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற மத்திய முகமைகள் மூலம்  மராட்டிய ஆளுங்கட்சியினருக்கு நெருக்கடி கொடுப்பதற்கு பதிலடியாக போலீசார் மூலம் பா.ஜனதா தலைவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. 


மேலும் செய்திகள்