அதியமான் கோட்டத்தில் நடந்த விழாவில் சிறந்த இளைஞர் மன்றத்திற்கு விருது

அதியமான் கோட்டத்தில் நடந்த விழாவில் சிறந்த இளைஞர் மன்றத்திற்கு விருது வழங்கப்பட்டது.;

Update: 2022-03-12 17:20 GMT
தர்மபுரி:
நல்லம்பள்ளியை அடுத்த அதியமான் கோட்டத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் தர்மபுரி மாவட்ட இளைஞர் மாநாடு மற்றும் சிறந்த இளைஞர் மன்றத்திற்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை தாங்கி மாவட்ட அளவில் சிறந்த இளைஞர் மன்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இளைஞர் மன்றத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் விருதை வழங்கினார். பாப்பாரப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் ஆகிய இடங்களில் தையல் பயிற்சி முடித்த 25 பெண்கள், அரூரில் கணினி பயிற்சி முடித்த 25 பெண்கள் ஆகியோருக்கு சான்றிதழ்கள், 10 இளைஞர்கள் மற்றும் மகளிர் மன்றங்களுக்கு  விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாச சேகர், மாவட்ட இளைஞர் மன்ற அலுவலர் பிரேம் பரத்குமார், நேரு யுவகேந்திரா திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மருத்துவ அலுவலர் கனிமொழி, சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் அரவிந்த் குமார், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கோவிந்தராஜ் உள்பட இளைஞர்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்