தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-03-12 17:20 GMT
தர்மபுரி:
தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேர்த்திருவிழா
தர்மபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா  தொடங்கியது. விழாவையொட்டி சாலுக்கிரகம் அழைத்தல் மற்றும் புற்று மண் எடுத்து வாஸ்து சாந்தி பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் சிறப்பு யாகசாலை பூஜைகளுடன் திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நரி வாகன உற்சவமும்,  (திங்கட்கிழமை) பூத வாகன உற்சவமும், 15-ந் தேதி நாக வாகன உற்சவமும் நடக்கிறது.
வருகிற 16-ந் தேதி பால்குட ஊர்வலம் மற்றும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 7.30 மணிக்கு சாமி திருக்கல்யாணமும், தோரணவாயில் ஊஞ்சல் சேவை மற்றும் மயில்வாகன உற்சவமும் நடக்கிறது. 17-ந் தேதி விநாயகர் தேரோட்டம் மற்றும் யானை வாகன உற்சவம் நடக்கிறது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நாளான வருகிற 18-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு பெண்கள் மட்டும் வடம் பிடிக்கும் தேரோட்டமும், மாலை 4 மணிக்கு பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடக்கிறது. விழாவையொட்டி அன்னசாகரம் செங்குந்தர் திருமண மண்டபம் மற்றும் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.
வருகிற 19-ந் தேதி வேடர்பறி உற்சவமும், 20-ந் தேதி விழா கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவமும், 21-ந் தேதி சயன உற்சவமும், 22-ந் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்