ஓசூர் தேர்பேட்டையில் ரூ60 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ மேயர் தொடங்கி வைத்தனர்

ஓசூர் தேர்பேட்டையில் ரூ60 லட்சத்தில் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ மேயர் தொடங்கி வைத்தனர்.

Update: 2022-03-12 17:20 GMT
ஓசூர்:
ஓசூரில் வருகிற 18-ந்தேதி சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ஓசூர் தேர்பேட்டையில், மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.. இதில் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், 30-வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், மாநகராட்சி கவுன்சிலர்கள் பார்வதி நாகராஜ், சென்னீரப்பா, மாதேஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராமு, ஒப்பந்தக்காரர் விசுவநாதன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்