கந்திகுப்பம் அருகே தொழிலாளி வீடு தீயில் எரிந்து சேதம்

கந்திகுப்பம் அருகேதொழிலாளி வீடு தீயில் எரிந்து சேதமானது.

Update: 2022-03-12 17:20 GMT
பர்கூர்:
கந்திகுப்பம் அருகே உள்ள மிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியாமல் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் இதுகுறித்து அவர்கள் பர்கூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 
அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேலு தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் வீடு முழுவதும் தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இதில் வீட்டில் இருந்த துணி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்