ஊத்தங்கரை அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு
ஊத்தங்கரை அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு போனது.;
ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே உள்ள மெய்யாண்டப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 49). விவசாயி. இவர் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்று விட்டு மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை, வெள்ளி நகை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து ஆனந்தன் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.