சூளகிரி அருகே வாகனம் மோதி வாலிபர் சாவு

சூளகிரி அருகே வாகனம் மோதி வாலிபர் இறந்தார்.

Update: 2022-03-12 17:19 GMT
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே பெப்பாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணப்பா. இவருடைய மகன் ஆனந்தபாபு (31). இவர், நேற்று முன்தினம் இரவு ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அட்டக்குறுக்கி என்ற இடத்தில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு சென்று விட்டது. இதில், ஆனந்தபாபு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்