ஓசூரில் வெல்டிங் தொழிலாளி தற்கொலை
ஓசூரில் வெல்டிங் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
ஓசூர்,:
ஓசூர் மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சக்திவேல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.