ஊத்தங்கரை பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
ஊத்தங்கரை பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஊத்தங்கரை:
ஊத்தங்கரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அறக்கட்டளை மற்றும் ஊத்தங்கரை நகர வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் பேரூராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா ஸ்ரீ வித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில் நடந்தது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு அறக்கட்டளை தலைவர் டாக்டர் இளையராஜா தலைமை தாங்கினார். நகர வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் தணிகை கருணாநிதி வரவேற்று பேசினார். இதையடுத்து பேரூராட்சியில் வெற்றி பெற்ற தலைவர் அமானுல்லா, துணைத்தலைவர் கலைமகள் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்களை பாராட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் பரிசு வழங்கியதுடன், ஊத்தங்கரை பேரூராட்சியை முதன்மை பேரூராட்சியாக மாற்ற பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் சேம் கிங்ஸ்டன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரேசன், ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி செயலாளர் ராஜீ, முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் குணசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய், டாக்டர் கந்தசாமி, பா.ம.க. மாவட்ட செயலாளர் ஆறுமுகம், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.