தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல் நாகல்நகரில் மேம்பாலத்தின் அருகில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் நாகல்நகரில் தினமும் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்க பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். -கதிரேசன், நாகல்நகர்.
பயணிகள் நிழற்குடையின் பரிதாபம்
திண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிநாயக்கன்பட்டியில் கடந்த சிலநாட்களாக குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அவை காற்றில் பறந்து சாக்கடை கால்வாயில் விழுவதால், கால்வாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்லத்தீப், பேகம்பூர்.
போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல் நாகல்நகரில் மேம்பாலத்தின் அருகில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றன. இதனால் நாகல்நகரில் தினமும் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை தவிர்க்க பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். -கதிரேசன், நாகல்நகர்.
பயணிகள் நிழற்குடையின் பரிதாபம்
சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. அதற்குள் அமர்ந்து சிலர் மது குடிப்பதால், பயணிகள் நிழற்குடை மதுபாராக மாறி வருகிறது. இதனால் பயணிகள் உள்ளே சென்று அமர முடியாத வகையில் ஆங்காங்கே மதுபாட்டில்கள் கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, அப்பிபட்டி.
தெருநாய்கள் தொல்லை திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை அருகேயுள்ள கஸ்தூரி நாயக்கன்பட்டியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து விட்டது. இரவில் மட்டுமின்றி பட்டப்பகலில் கூட தெருவில் மக்கள் நடமாட முடியவில்லை. குழந்தைகளை தெருவில் விளையாடுவதற்கு அனுமதிக்கவே பயமாக இருக்கிறது. தெருநாய்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-லிங்கம், கஸ்தூரிநாயக்கன்பட்டி.
குப்பைகளை அகற்ற நடவடிக்கைதிண்டுக்கல் பேகம்பூரை அடுத்த பூச்சிநாயக்கன்பட்டியில் கடந்த சிலநாட்களாக குப்பைகள் அள்ளப்படவில்லை. இதனால் தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் அவை காற்றில் பறந்து சாக்கடை கால்வாயில் விழுவதால், கால்வாயில் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பைகளை தினமும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -அப்துல்லத்தீப், பேகம்பூர்.