அரசு பஸ் மோதி மில் தொழிலாளி பலி

வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி மில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-03-12 17:09 GMT
வத்தலக்குண்டு:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிழார்பட்டியை சேர்ந்த காசிமாயன் மகன் நந்தகுமார் (வயது 27). அதே ஊரை சேர்ந்தவர் சுபாஷ் (45). இவர்கள் 2 பேரும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே எழுவனம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் பழைய வத்தலக்குண்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நந்தகுமார் ஓட்டினார். சுபாஷ் பின்னால் அமர்ந்திருந்தார்.
பழைய வத்தலக்குண்டு மயானம் அருகில் அவர்கள் வந்தபோது, பின்னால் வத்தலக்குண்டுவில் இருந்து ஆண்டிப்பட்டி நோக்கி சென்ற அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். சுபாஷ் படுகாயமடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த சுபாசை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நந்தகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்