ஓடும் ெரயிலில் இருந்து வடமாநில வாலிபர் தூக்கி வீசப்பட்டார்
நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஓடும் ெரயிலில் இருந்து வடமாநில வாலிபர் தூக்கி வீசப்பட்டார்
வாணியம்பாடி
உத்தரகாண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட் எக்கா (வயது 23), இவர் கேரள மாநிலம், திருச்சூரில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று திருச்சூரில் இருந்து ராஞ்சிக்கு, தன்பாத் விரைவு ெரயில் மூலம் பயணம் மேற்கொண்டார்.
ெரயில் வாணியம்பாடி அருகே புதூர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது நண்பர்களுடன் ஏற்பட்ட மோதலில் ஆல்பர்ட் எக்காவை ெரயிலில் இருந்து துக்கி வீசப்பட்டார்.
இதில் மின் கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்து கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு ெரயில்வே பாலம் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு வாணியம்பாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி டவுன் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் மேல் விசாரணைக்கு ஜோலார்பேட்டை ெரயில்வே போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.