திண்டிவனம் அருகே மொளசூர் ஏரியில் ஆண் பிணம் போலீஸ் விசாரணை
திண்டிவனம் அருகே மொளசூர் ஏரியில் ஆண் பிணம் போலீஸ் விசாரணை
திண்டிவனம்
திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் பிணமாக மிதப்பதை பார்த்த கிராம மக்கள் அதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிளியனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் ஆழமான பகுதியில் பிணம் மிதந்து கொண்டிருந்ததால் திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்களை போலீசார் வரவழைத்து ஏரியில் பிணமாக கிடந்தவரை மீட்டனர்.
ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எவ்வாறு இறந்தார்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? இதையடுத்து அந்த ஆண் நபரின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.