புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
மூங்கில்துறைப்பட்டு அருகே புகையிலை பொருட்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அடுத்த பவுஞ்சிப்பட்டு பகுதி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி மற்றும் போலீசார் பவுஞ்சிப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையை சோதனை செய்து பார்த்தபோது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கடை உரிமையாளரான அதே பகுதியை சேர்ந்த ஷேக்பகதூர் மகன் அஸ்கர் அலி (வயது 45) என்பவரை கைது செய்த போலீசார், கடையில் இருந்த 3 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.