விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்ட முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம்
விழுப்புரம்
விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் விழுப்புரத்தில் மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குனர் அருள்மொழி தலைமை தாங்கினார். ஊட்டி வெலிங்டனில் உள்ள சென்னை ராணுவப்படை கவில்தார் ஜீவன், பெங்களூருவில் உள்ள சென்னை என்ஜினீயரிங் குரூப்(ராணுவ பொறியியல் படை) சுபேதார்கள் சின்னையா, முகுந்தன், விஜய்குமார், பவன், ஹரி, ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் படைவீரர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இதில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பலர் கலந்துகொண்டு முகவரி மாற்றம், திருத்தம், ஓய்வூதிய முரண்பாடுகள் உள்ளிட்டவற்றை தீர்க்கக்கோரி மனு கொடுத்தனர். மனுக்களை பெற்ற அலுவலர்கள், இதுகுறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நல அலுவலர் விஜயகுமார், முன்னாள் படைவீரர்கள் நலச்சங்க தலைவர் மார்க், செயலாளர் அருளப்பன், பொருளாளர் சாலமன், உதவி செயலாளர் ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.