சின்னசேலம் அருகே கால்நடை மருத்துவ முகாம்

சின்னசேலம் அருகே கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-03-12 16:15 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தில் கால்நடைத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கால்நடை உதவி மருத்துவர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆவின் கால்நடை மருத்துவர் கார்த்திகா வரவேற்றார். கால்நடை பராமரிப்பு உதவியாளர் உமா, ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர். 

மேலும் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து முன்னோடி விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் ரம்யா, கால்நடை வளர்ப்போர் ஆறுமுகம், ஆதிமூலம், வெங்கடேசன், பாபு, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்