டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தடகள போட்டி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் தடகள போட்டி நடந்தது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியில் 28-வது ஆண்டு தடகள போட்டி நடந்தது. ஆண்களுக்கு 20 போட்டிகளும், பெண்களுக்கு 19 போட்டிகளும் நடந்தது. ஆண்கள் 8 அணிகளாகவும், பெண்கள் 4 அணிகளாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் சிறந்த தடகள வீரராக விஸ்வநாதன் ஆனந்த் அணியை சேர்ந்த மாணவர் வனமுத்து மற்றும் பெண்கள் பிரிவில் சிறந்த தடகள வீராங்கனையாக கர்ணம் மல்லேஸ்வரி அணியை சேர்ந்த மாணவி கோபிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஆண்கள் பிரிவில் ஓட்டு மொத்த புள்ளி கணக்கில் மேஜர் தயான் சந்த் அணி 64 புள்ளிகளுடன் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் கர்ணம் மல்லேஸ்வரி அணியினர் 81 புள்ளிகளுடன் முதலிடத்தையும் பெற்றனர்.
போட்டியின் நிறைவில் பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி செயலாளர் நாராயணராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சாம்ராஜ் வரவேற்றார். இணை பேராசிரியை தனலெட்சுமி அறிமுகம் உரையாற்றினார். விழாவில், சிறப்பு அழைப்பாளராக நாகர்கோவில் கிறிஸ்டியன் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் பிரைட் செல்வக்குமார் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் உதவி பேராசிரியர் நெல்சன்துரை ஆண்களுக்கான தடகள போட்டி அறிக்கையினையும், உதவி பேராசிரியை நிர்மலாதேவி பெண்களுக்கான தடகள போட்டி அறிக்கையினையும் வாசித்தனர். நிகழ்ச்சிகளை உதவி பேராசிரியர் செல்வக்குமார் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர்கள் சிவா, சாம்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் கணேஷ் நன்றி கூறினார்.