கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி

கும்மிடிப்பூண்டி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.

Update: 2022-03-12 15:12 GMT
கும்மிடிப்பூண்டி,  

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் சின்ன பொண்ணு(வயது 64). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து பார்த்த போது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் திருட முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது.

இதைபோல் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஒப்பந்ததாரர் ராஜாபாபு(35) என்பவரது வீட்டின் பூட்டையும் உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்தது தெரியவந்தது. ஒரே பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருட முயற்சித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்