சாதி வேறுபாடுகளை போக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தர் கூறினார்

சாதி வேறுபாடுகளை போக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தர் கூறினார்

Update: 2022-03-12 14:52 GMT

கோவை

சாதி வேறுபாடுகளை போக்க முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தர் கூறினார்.

கட்டிட தொழிலாளி சாவு

கோவையை அடுத்த சூலூர் போகம்பட்டி பொன்னாங்கன்னி கிராமத் தில் கடந்த மாதம் 7-ந் தேதி நடைபெற்ற விபத்து இருதரப்பினர் இடை யே மோதலாக மாறியது. 

இதில் கட்டிட தொழிலாளி ராமு (வயது 45) படுகாயம் அடைந்து மருத்துவமனையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 13 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்தர், பொன்னாங்கன்னி கிராமத்துக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். 

அப்போது பாதிக்கப்பட்ட ராமுவின் மனைவி லட்சுமியிடம் நடந்த சம்பவம் பற்றியும், அவர்களுக்கான தேவை மற்றும் போலீசாரின் நடவடிக்கை ஆகியவை குறித்து விசாரித்து கேட்டறிந்தார்.

பின்னர் அருண் ஹால்தர் நிருபர்களிடம் கூறியதாவது

இது போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசும், தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் துணையாக இருந்து வருகி றது.

 பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுவதில் தாழ்த்தப் பட்டோர் ஆணையம் முன்னோடியாக திகழ்கிறது. 


பொன்னாங்கன்னி கிராமத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவியிடம் விவரங்களை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும். 

இந்த சம்பவம் பழிவாங்கும் போக்காக மாறிவிடாமல் இருக்க இரு தரப்பினர் இடையே போலீசார் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். 

வேலை வாய்ப்பு

பாதிக்கப்பட்ட நபரின் மகளுக்கு வேலைவாய்ப்புக்கு மாவட்ட வருவாய்த்துறை ஏற்பாடு செய்து கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது 

 பிரதமரின் வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தற்போதும் சாதி வேறுபாடுகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. 

எனவே சாதிவேறுபாடுகளை தடுக்க  மாநில, மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட வேண்டும்.

 இது போன்ற நிகழ்வுகளை தேசிய தாழ்த்தப்பட் டோர் ஆணையம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்