அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம்

அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-03-12 18:45 GMT
வாய்மேடு:-

நாகை மாவட்டம் வாய்மேடு இலக்குவனார் அரசு நடுநிலைப்பள்ளியில் குளிர்கால நோய்களுக்கான சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு தலைமை ஆசிரியர் சார்லஸ் தலைமை தாங்கினார். இதில் சித்த மருத்துவர் கவிதா கலந்து கொண்டு இருமல், சளி உள்ளிட்டவற்றுக்கு மருந்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள் ராசேந்திரன், சுதா, சுமதி, சந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் மணிமொழி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்