முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, பொதுமக்கள் விரும்பும் வகையில் காவல்துறை செயல்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் கூறினார்

முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, பொதுமக்கள் விரும்பும் வகையில் காவல்துறை செயல்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் கூறினார்

Update: 2022-03-12 14:43 GMT

கோவை

முதல்-அமைச்சரின் அறிவுரையின்படி, பொதுமக்கள் விரும்பும் வகையில் காவல்துறை செயல்படும் என்று நகர போலீஸ் கமிஷனர் பிரதீப்குமார் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் கலெக்டர்கள், காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இதில் மக்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டம் முடிந்து கோவை திரும்பிய நகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமாரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

மக்கள் விரும்பும் காவல்துறை

கேள்வி:- காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் கூறிய அறிவுரை என்ன? அதை நகரில் எவ்வாறு செயல்படுத்துவீர்கள்?


பதில் :- மக்கள் நலம், சமுதாய நல்லிணக்கம், குற்றங்கள் குறைந்த ஒரு வாழ்க்கை முறை ஆகியவற்றை தலையாய கடமையாக கொண்டு காவல்துறை செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஆலோச னை வழங்கினார். 

அதன்படி கோவையில் மக்கள் விரும்பும் வகையில் காவல் துறை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். சாதி, மத சண்டைகள் இன்றி மக்கள் உரிய பாதுகாப்பு மற்றும் அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்

கேள்வி:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க முதல்-அமைச்சர் கூறிய அறிவுரை என்ன?

பதில்:- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருள், பொருளாதார குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படு கிறது. சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.  

அவர்க ளை கைது செய்து கோர்ட்டில் உரிய ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்க ளுடன் நிரூபித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

 கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கும் கடும் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். தற்போது பொருளாதார குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதை தடுக்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

குண்டர் தடுப்பு சட்டம்

கேள்வி:- சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றங்களை தடுக்கவும் குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்- அமைச்சர் ஆலோசனை கூறி உள்ளாரே?

பதில் :- கோவை நகரில் மீண்டும், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்ட வர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகிறார்கள். கடந்த ஆண்டு 70 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட் டனர். இந்த ஆண்டு இதுவரை 18 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மதமோதல்களை தடுக்க சிறப்பு பிரிவு

கேள்வி :-மதமோதல்களை தடுக்க கோவையை போல் மற்ற மாவட்டங்களிலும் சிறப்பு பிரிவு அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளாரே?

பதில்:- கோவை நகரில் மத மோதல்களை தடுக்கும் சிறப்பு பிரிவுக்கு நான் தலைவராக உள்ளேன். சிறிய, சிறிய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தீர்த்தால் கலவரம், வன்முறை போன்ற சம்பவங்கள் நடைபெறாது. கோவையை போல் மற்ற மாவட்டங்களிலும் இந்த சிறப்பு பிரிவு அமைக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

கேள்வி :-கோவை நகரில் காவல்துறையை மேம்படுத்த முதல்- அமைச்சரின் சிறப்பு திட்டங்கள் என்ன?

பதில்:- கோவை நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் மூலம் புகார் வந்தால் 2 நிமிடம் 59 நொடிகளில் சம்பவ இடத்தை அடைவ தில் கோவை நகர போலீஸ் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. 

இதற்காக நவீன வாகனங்கள் கோவை காவல்துறைக்கு வழங்கப்பட்டு உள்ளது. புதிதாக காவலர்கள் தேர்வு மூலம் கோவைக்கு காவலர்கள் நிரப்பப்பட உள்ளனர். குடியிருப்புகள் பெருக்கத்துக்கு ஏற்ப புதிய போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட உள்ளன.

இ - நிர்வாகம்

கேள்வி:- இ- நிர்வாகத்தில் கோவை நகரம் விருது பெறுவது எப்போது?
பதில் :- கோவை நகரம் வரும் ஆண்டில் இ-நிர்வாகத்தில் முதலிடம் பெற்று மாநில விருதை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

கேள்வி :-கோவை நகரில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் எந்த அளவில் செயல்படுத்தப்படும் ?

பதில் :- விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் - அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் அதன்படி கோவை நகரில் விபத்து சாவு நடைபெற்ற பகுதிகளை பிளாக் ஸ்பாட் என்று முறையில் கண்காணித்து வருகிறோம். 

மேலும் விபத்துகள் நடக்காமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்