நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்வு-370 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 365 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால் முட்டை கொள்முதல் விலை 370 காசுகளாக அதிகரித்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-395, ஐதராபாத்-346, விஜயவாடா-364, மைசூரு-385, மும்பை-405, பெங்களூரு-385, கொல்கத்தா-438, டெல்லி-377.
கறிக்கோழி கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.132 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல் முட்டைக்கோழி கிலோ ரூ.6 உயர்த்தப்பட்டு, ரூ.66 ஆக அதிகரித்தது.