சேந்தமங்கலம், வளையப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்
சேந்தமங்கலம், வளையப்பட்டி பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
நாமக்கல்:
சேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் வளையப்பட்டி துணை மின் நிலையத்திலும் நாளை மறுநாள் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.