ஆதித்தனார் கல்லூரியில் யோகா தியான பயிலரங்கம்
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யோகா தியான பயிலரங்கம் நடைபெற்றது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் (அணி எண் 231), இளையோர் செஞ்சிலுவை சங்கம் (சுயநிதிப்பிரிவு) மற்றும் இதய நிறைவு அறக்கட்டளை சார்பில் 3 நாட்கள் யோகா தியான பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதன் தொடக்க விழாவில், இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் பேராசிரியை பார்வதி தேவி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், இன்றைய கால சூழ்நிலையில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தை போக்குவதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் யோகா மற்றும் தியான பயிற்சியின் அவசியத்தை எடுத்துரைத்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இதய நிறைவு அறக்கட்டளையின் பயிற்றுனர் பாஸ்கரராஜ் சிறப்பு பயிற்சி வழங்கினார். விழாவின் இறுதியில் சுயநிதிப்பிரிவு நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயராமன் நன்றி கூறினார்.
நிறைவு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) அன்பரசன் தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு யோகா சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் சிங்காரவேலு, சிரில் அருண், கரோலின் கண்மணி ஆனந்தி, திருச்செல்வன், ரூபன் சேசு அடைக்கலம், சுமதி, செந்தில்குமாரி, டயானா, கவிதா, ராஜபூபதி, ஜெயந்தி, பெனட், சகாய ஜெயசுதா, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியினை மாணவர் சீனிவாசகன் தொகுத்து வழங்கினார்.