மக்கள் நீதிமன்றத்தில் 489 வழக்குகளுக்கு தீர்வு

ஆரணியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 489 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.;

Update: 2022-03-12 13:30 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. 

ஆரணி வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான க.ஜெயவேல் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பி.டி. சதீஷ் குமார் முன்னிலை வகித்தார். வக்கீல் சங்க தலைவர் எஸ்.ஸ்ரீதர் வரவேற்றார். 

மக்கள் நீதிமன்றத்தில் பாண்டு வழக்குகள், வங்கி நீண்ட கால நிலுவை பாக்கி வழக்குகள், சிறு வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்து வழக்கு போன்றவை உள்பட 489 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. 

அதன் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 62 ஆயிரத்து 501-க்கு தீர்வு காணப்பட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மக்கள் நீதிமன்றத்தில் வக்கீல் சங்க செயலாளர் பாலாஜி, அமர்வு வக்கீல் ஏ. சிகாமணி, அரசு வக்கீல்கள் கே.ஆர்.ராஜன், கே.ராஜமூர்த்தி, கைலாஷ், வக்கீல் சங்க முன்னாள் தலைவர்கள் வி.வெங்கடேசன், எஸ்.தனஞ்செழியன், எம். மூர்த்தி, சரவணன் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்