அதிகாரிகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் அமைதி பேரணி

குன்னூரில் டேன்டீ அதிகாரிகளை கண்டித்து தொழிற்சங்கத்தினர் அமைதி பேரணி நடத்தினர்.

Update: 2022-03-12 13:17 GMT
குன்னூர்

டேன்டீ நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குன்னூரில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மீனாட்சி சரவணன் (வயது 40) என்பவர் உதவி கணக்கு அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பணி சுமை மற்றும் உயர் அதிகாரிகளின் நெருக்குதலாலும் தான் மீனாட்சி சரவணன் தற்கொலை செய்து கொண்டதாக ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

இதனால் டேன்டீ நிர்வாக இயக்குனர், பொது மேலாளர், கம்பெனி செயலாளர் ஆகியோரை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் டேன்டீ ஊழியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. மவுன ஊர்வலம் சிம்ஸ் பூங்காவில் தொடங்கி பெட் போர்டு வரை நடைபெற்றது.

 இந்த நிலையில் மீனாட்சி சரவணனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் வெலிங்டன் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது டேன்டீ தொழிலாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்