சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்வதன் பயன்பாடு குறித்து பயிற்சி

சமையல் எண்ணெயை மறுசுழற்சி செய்வதன் பயன்பாடு குறித்து பயிற்சி வியாபாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2022-03-12 13:09 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவுப் பொருட்களை பாதுகாப்பாக விற்பது, பொட்டலமிடப்பட்ட பொருட்களின் விவரங்களை உறுதிப்படுத்தி கொள்வது குறித்து வியாபாரிகளுக்கு பயிற்சி முகாம் குன்னூரில் நடைபெற்றது. 

முகாமுக்கு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார். முகாமில் பொட்டலம் இடப்பட்ட பொருட்களின் மீது எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. உரிமம், உணவின் பெயர், உற்பத்தியாளர் பெயர் மற்றும் முழு முகவரி, தயாரித்த தேதி, நிகர எடை, பயன்படுத்தக்கூடிய தேதி, காலாவதி தேதி, ஊட்டசத்து விவரம், உணவு சேர்க்கைகள் அளவு, எங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்டது, 

சைவ அல்லது அசைவ குறியீடு, நுகர்வோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் லேபிளில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். இதனை சரிபார்த்து வாங்கி நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து விற்பனை செய்யக் கூடிய பொருட்களை சரியாக பராமரிக்க வேண்டும். 

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்வதன் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகுமார் மற்றும் உணவக, பேக்கரி வணிகர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்