கோழி பண்ணையில் பதுக்கி வைத்து இருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கோழி பண்ணையில் பதுக்கி வைத்து இருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்;
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் உள்ள கோழி பண்ணையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையில் பறக்கும் படை தாசில்தார் சுப்பிரமணியம், நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் மற்றும் அருள் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது கூத்தாண்டகுப்பம் கிராமத்தில் உள்ள ராஜாவீதி இ-சேவை பின்புறமுள்ள கோழி பண்ணையில் தலா 50 கிலோ எடையுள்ள 27 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் சுமார் 1½ டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைத்தனர்.
மேலும் கோழி பண்ணையில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.