அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்
கோவிலூர் நெல் கிடங்கிற்கு அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முத்துப்பேட்டை;
கோவிலூர் நெல் கிடங்கிற்கு அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கோவிலூரில் தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழக நெல் குடோன் உள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நெல் குடோனில் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகளும் இல்லை. இதைத்தொடர்ந்து நேற்று ஏ.ஐ.டி.யூ.சி. கோவிலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி நெல் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வருகை பதிவேடு
ஆர்ப்பாட்டத்துக்கு நிர்வாகி புஸ்பநாதன் தலைமை தாங்கினார்.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் லாரிகள் செல்வதற்கு வசதியாக பாதையை செப்பனிட்டு உடனே சாலை வசதி செய்து தரவேண்டும். மின் விளக்கு வசதி, தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.
சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும். கிடங்கில் உள்ளே வர வெளியே செல்ல பதிவிடும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.