கொேரானா தடுப்பூசி முகாம்

வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதிகளில் கொேரானா தடுப்பூசி முகாம்

Update: 2022-03-12 11:39 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா  உத்தரவின்பேரில் சுகாதாரப்பணிகள்  துணை இயக்குனர் டி.ஆர். செந்தில் வழிகாட்டுதலின்படி, ஆலங்காயம் வட்டாரம் மற்றும் வாணியம்பாடி நகராட்சி பகுதிகள், அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 24-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

இதில் கிராம சுகாதார செவிலியர்கள், நடமாடும் மருத்துவமனை மற்றும் ஆர்.பி.எஸ்.கே. குழுவினர் மூலம் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

இந்த பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் ச.பசுபதி  நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்