குடியாத்தம் பகுதியில் சாராயம் விற்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
குடியாத்தம் பகுதியில் சாராயம் விற்ற 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ்சாராய விற்பனை படுஜோராக நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் வீடியே காட்சி பரவியது. இதன் எதிரொலியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், குமரன் உள்ளிட்ட போலீசார் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள கிராமங்களில் அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது குடியாத்தம்
அடுத்த தட்டப்பாறை மாரியம்மன் பட்டியில் சாராயம் விற்று வந்த தனலட்சுமி (வயது 45), எர்த்தாங்கல் கால்வாய்மேடு பகுதியைச் சேர்ந்த தேவகி (63), பெரும்பாடி பகுதியை சேர்ந்த பூங்கொடி (45), அக்ராவரம் அடுத்த சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த உமாபதி (40) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தலா 55 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.
குடியாத்தம் பகுதியில் சாராயத்தை கட்டுப்படுத்துவதில் மதுவிலக்கு பிரிவு போலீசார் மெத்தனமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.