சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
விக்கிரமசிங்கபுரம் அருகே சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி ஈஸ்வரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சமுத்திரம் என்பவருடைய மனைவி கனகமணி (வயது 80). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை கனகமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.