4 மாநில தேர்தலில் வெற்றி: பா.ஜனதாவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

4 மாநில தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதையடுத்து, தென்காசி மாவட்டத்தில் அந்த கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Update: 2022-03-11 23:42 GMT
தென்காசி:
உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநில தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதையொட்டி, தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு பா.ஜனதாவினர் மாவட்ட தலைவர் ராமராஜா தலைமையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நகர தலைவர் குத்தாலிங்கம், நகர பொதுச்செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைத்தலைவர் முத்துகுமார், மண்டல பார்வையாளர் முருகன், பொருளாளர் சேகர், செயலாளர்கள் மாரியப்பன், ராமச்சந்திரன், செய்தி தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர் பாண்டியன், துணைத்தலைவர்கள் மந்திரமூர்த்தி, கருப்பசாமி, நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், சுனிதா முத்து, லட்சுமண பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில் 17-வது வார்டில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவு துணைத்தலைவர் ராஜ் தேவேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அந்தோணிராஜ், சுப்புபாய், நகர இளைஞரணி விக்னேஷ், பிரதீப்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூரில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தெற்கு ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராம்குமார், இளைஞர் அணி மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பட்டியல் அணி செயலாளர் சாமி, ஒன்றிய நிர்வாகிகள் பண்டாரம், செல்வகணேசன், மாரிபாண்டியன், கருப்பசாமி, கெங்காதரன், செல்லத்துரை, ஆறுமுகம், வாஜ்பாய் முருகன், முத்துகுமார், திருமலை முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்