ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2022-03-11 23:16 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி, அன்னை யோகாம்பிகை கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை கொடியேற்றமும், அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி வலமும், அப்பர் சுவாமி வீதி வலமும், இரவு விநாயகர் மூசிக வாகனத்திலும், முருகன் மயில் வாகனத்திலும் வீதி வலம் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு ஏக சிம்மாசனத்தில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் வைத்திலிங்க சுவாமி, அன்னை யோகாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 10-ம் திருவிழாவான வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு சுவாமி, அம்பாள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டி சவுந்திரராஜன் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.




மேலும் செய்திகள்