தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
கடையம் அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன.
கடையம்:
கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். நேற்று முன்தினம் இரவு இவரது தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள், 10-க்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் பனை, மா மரங்களை சாய்த்தும், முறித்தும் நாசப்படுத்தி உள்ளன. இதேபோல் மாணிக்க வாசகம், பாலன் ஆகியோரது தோட்டங்களிலும் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி உள்ளன. இதையடுத்து காட்டு யானைகள் விளைநிலங்களில் புகாத வகையில், மின்வேலியை முறையாக பராமரித்து சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.