மணல் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகி கைது

கல்லிடைக்குறிச்சி அருகே மணல் கடத்தல் வழக்கில் தி.மு.க. நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-11 22:05 GMT
நெல்லை:
அம்பை, கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து ‘எம்.சாண்ட்’ மணல் எடுப்பதாக கூறி அரசிடம் அனுமதி பெற்றுவிட்டு, அந்த பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் உள்ள மணலை எடுத்து கழுவி கடத்தி விற்றதாக புகார் எழுந்தது. 

இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இ்்ந்த வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் மற்றும் கேரளா பிஷப்-பாதிரியார்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து 25-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர் பலர் ஜாமீனில் வெளிேய வந்தனர்.

இந்த நிலையில் இதுசம்பந்தமாக கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் மூலச்சியை சேர்ந்த சீவலமுத்து என்ற குமாரை (வயது 34) சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி, இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோர் கைது செய்தனர். கைதான சீவலமுத்து தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகள்