இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்துக்கு மறுப்பு-வாலிபருக்கு வலைவீச்சு

காதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-03-11 21:28 GMT
சிக்கமகளூரு:
காதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்து ஏமாற்றி திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

உல்லாசம்

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா தொட்டகட்டே கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாத் (வயது 28). இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஜோடியாக பல பகுதிகளில் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். 

இந்த நிலையில், விஸ்வநாத், அந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி, பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளார். 

திருமணத்துக்கு மறுப்பு

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக இளம்பெண்ணுடன் பேசுவதை விஸ்வநாத் தவிர்த்து வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விஸ்வநாத்தை பார்த்த அந்த இளம்பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தி உள்ளார்.  

அப்போது அவர், தான் உன்னை காதலிக்கவில்லை. உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், இதுகுறித்து ஒசதுர்கா போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி அறிந்ததும் விஸ்வநாத் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து ஒசதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விஸ்வநாத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்