ஆதார் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

இருப்பாளியில் ஆதார்காட்டில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.;

Update: 2022-03-11 20:42 GMT
எடப்பாடி:-
எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி, கலர்பட்டி சமுதாய நலக்கூடத்தில் அஞ்சல் துறை சார்பாக ஆதார் பதிவு மற்றும் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய சிறப்பு சேவை முகாம் நடைபெற்று வருகிறது. முகாமை இருப்பாளி ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு ஈட்டிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மேலும் முகாமில் சங்ககிரி உட்கோட்ட ஆய்வாளர் மனோஜ்குமார் பேசும் போது, பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் தங்களுக்கான சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார். இதில் ஊராட்சி செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் பூபதி, ராஜா, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்