வாலிபர் இழந்த ரூ.2¼ லட்சம் திரும்ப ஒப்படைப்பு

ஆன்லைன் மோசடி மூலம் வாலிபர் இழந்த ரூ.2¼ லட்சம் சைபர் கிரைம் போலீசாரின் நடவடிக்கையால் திரும்ப ஒப்டைக்கப்பட்டது.

Update: 2022-03-11 20:41 GMT
சேலம்:-
எடப்பாடியை சேர்ந்தவர் கவுதம் (வயது 20). அவருடைய செல்போன் எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை தொடர கொடுக்கப்பட்டுள்ள லிங்கிற்குள் சென்று பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி கவுதம் அந்த லிங்கை பதிவிறக்கம் செய்து அதில் வங்கிக்கணக்கு உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்தார்.
இதையடுத்து அவருடைய வங்கி கணக்கில் இருந்து 7 தவணையாக ரூ.2 லட்சத்து 83 ஆயிரத்து 31 மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கவுதம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் துரிதமாக செயல்பட்டு முறைகேடாக நடைபெற்ற பணபரிவர்த்தனை பற்றி தீவிரமாக விசாரித்தனர். இதையடுத்து ரூ.2 லட்சத்து ரூ.28 ஆயிரத்து 45 மீண்டும் கவுதமின் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.
யாராவது ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930-யை தொடர்பு கொள்ளலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம். இதன் மூலம் இழந்த பணத்தை மீட்டுத்தர முடியும் என்று போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீ அபினவ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்