திருமயத்தில் 8 பவுன் நகை திருட்டு

திருமயத்தில் 8 பவுன் நகை திருட்டு போனது

Update: 2022-03-11 20:34 GMT
திருமயம்
புதுக்கோட்டை ராம் தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சிவகாமி(38). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள சிவபுரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் சிவகாமி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து நமணசமுத்திரம் போலீசில் சிவகாமி புகார் அளித்தார்.
 திருமயம் அருகே உள்ள குருவிக்கொண்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(48). இவரது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் வீட்டில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றுள்ளார். இதுபற்றி பனையப்பட்டி போலீசில் முத்துக்குமார் புகார் செய்தார். 

மேலும் செய்திகள்