ராமர் அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா

ராமர் அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா வந்தார்.

Update: 2022-03-11 20:27 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. அதன்படி 3-ம் நாள் திருவிழாவான நேற்று இரவு பெருமாள், ராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவம் வருகிற 15-ந்தேதி இரவு கோவிலில் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 17-ந் தேதி நடக்கிறது.

மேலும் செய்திகள்