மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சாவு
மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தவர் உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள தாழைநகரை சேர்ந்தவர் லட்சுமிராஜன் (வயது 44). இவர் கடந்த 3-ந் தேதி அரும்பாவூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக லட்சுமிராஜன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த லட்சுமிராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று லட்சுமிராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.