தர்பூசணி ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை

தர்பூசணி ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது;

Update: 2022-03-11 20:12 GMT
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில், கோடைகாலம் தொடங்கும் முன்பே தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. இதனால் அவதிப்படும் பொதுமக்கள் பழரசம், குளிர்பானங்களை வாங்கி குடித்து வருகின்றனர். வெயில் நேரத்தில் வெளியில் செல்ல நேரிடும்போது தாகம் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் நீர்சத்து அதிகமாக உள்ள தர்பூசணி பழத்தை சிலர் நாடிச்சென்று சாப்பிடுவது உண்டு. அந்தவகையில் சாலையோர கடைகளில் ஒரு பீஸ் தர்பூசணி ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிலோ தர்பூசணி ரூ.15 முதல் ரூ.20 வரையும் விற்பனையாகிறது. அதனை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு தாகம் தணித்து கொள்கின்றனர்.
 இதன்காரணமாக தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது. அந்த தர்பூசணி  புதுக்கோட்டையில் உள்ள சாலையோரங்களில் ஆங்காங்கே விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பழக்கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தள்ளுவண்டிகளில்
 தர்பூசணியை பீசாக வெட்டி முக்கிய சாலை சந்திப்புகளிலும், தெருத்தெருவாகவும் தள்ளுவண்டியில் கொண்டு சென்று சிறுவியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணியை வாங்கி சாப்பிடுகின்றனர். இதேபோல இளநீர் விற்பனையும் அதிகரித்துள்ளது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்பூசணி ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனையாகிறது

மேலும் செய்திகள்