பழங்கால நாணய கண்காட்சி
எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழங்கால நாணய கண்காட்சி நடைபெற்றது.
நொய்யல்,
கந்தம்பாளையம் எஸ்.கே.வி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பழக்கால நாணய கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைவர் கோல்டன்ஹார்ஸ் ரவி, பொருளாளர் டாக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இதில், பழங்கால நாணயங்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகள், அஞ்சல் வில்லைகள், நூற்றாண்டு பழமையான கடிதங்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் இடம்பெற்றன. மாணவ-மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டனர். மேலும், ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அச்சிடுவதின் நோக்கத்தையும், அவற்றில் பயன்படுத்தப்படும் புராதான சின்னங்களின் முக்கியத்துவம் பற்றியும் அறிந்து கொண்டனர்.