அறிவியல் கண்காட்சி
விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.எல்.சி. நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி சத்திரரெட்டியபட்டி, தியாகராஜபுரம், பனையூர், தைலாபுரம், செட்டிகுளம், தமிழ்பாடி, திருச்சுழி, பட்டம்புதூர்ஆகிய ஊர்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். கண்காட்சியில் சிறந்த படைப்புகளை வைத்திருந்த 3 பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பனையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முதல் பரிசும், தியாகராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 2-வது பரிசும், விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டது. இதில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை ஜான்சிராணி, என்.எல்.சி. நிறுவன உதவி பொது மேலாளர் பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.