சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார்
விராலிமலை
விராலிமலை தாலுகா, ராஜாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வம். இவரது மகன் குணசேகரன்(வயது 23). இவர் மணப்பாறை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரி முடிந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். ஆண்டியப்பட்டி குளக்கரை வளைவு அருகே வந்தபோது எதிரே வந்த ஒரு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில், படுகாயம் அடைந்த குணசேகரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்த புகாரின்பேரில், விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.