பிச்சைக்காரர் பரிதாப சாவு

பிச்சைக்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்;

Update: 2022-03-11 19:35 GMT
மதுரை, 
மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதி டவுன் ஹால் ரோடு அருகே பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் அவரிடம் இருந்த பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பிச்சைக்காரரை சரமாரியாக தாக்கி பணத்தை பறித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த அந்த பகுதி மக்கள் திடீர்நகர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அக்பர்மரைக்கான் (வயது 33) என்று தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்த பிச்சைக்காரர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். அதை தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் இறந்த பிச்சைக்காரர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்