முத்தாலம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பரமக்குடி,
பரமக்குடி முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி கோவில் கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் முத்தாலம்மனுக்கும் சிறப்பு தீபாராதனையும் பூஜைகளும் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். இந்த திருவிழாவானது தொடர்ந்து 11 நாள் நடைபெறும். 19-ந்தேதி அக்னிச்சட்டி, தீச்சட்டி, கரும்பாலைத் தொட்டி எடுத்தல், வேல் குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்று இரவு மின்சார தீப அலங்கார தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறும். 21-ந் தேதி பால்குட ஊர்வலம் நடைபெறும். திருவிழாவையொட்டி கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை டிரஸ்டிகளும், ஆயிர வைசிய சபை நிர்வாகிகளும் செய்துள்ளனர்.