ராஜபாளையம் சஞ்சீவி மலையில் திடீர் தீ
ராஜபாளையம் சஞ்சீவி மலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
ராஜபாளையம்,
ராஜபாளையம் சஞ்சீவி மலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மலையில் தீ
ராஜபாளையத்தின் கிழக்கு பகுதியில் சஞ்சீவி மலை அமைந்துள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகை நகர், மலையடிப்பட்டி, இ.எஸ்.ஐ. காலனி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மலை உச்சியில் அமைந்துள்ள ராமர் கல் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு பகுதியில் பற்றிய நெருப்பு காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு வேகமாக பரவியது.
பரபரப்பு
இதனால் மலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சிறு, சிறு குழுக்களாக பிரிந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காற்றின் வேகத்தில் நெருப்பு கொளுந்து விட்டு எரிவதால், தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
மலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்து ராஜபாளையம் நகர மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.