விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-03-11 19:06 GMT
மதுரை, 
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சென்னை எண்ணூர்-தூத்துக்குடி இடையே எரிவாயு குழாய் பதிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மதுரை கிழக்கு தாலுகா அயிலாங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மாயாண்டிபட்டி கிராமத்தில் விைலநிலங்களில் குழாய் பதிப்பதற்கு குறைந்த இழப்பீடு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் சமமான இழப்பீடு வழங்கக்கோரியும், பட்டியலின மக்கள் நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும், குத்தகை விவசாயிகளுக்கு அவர்களுக்குரிய இழப்பீட்டை நேரடியாக வழங்க வலியுறுத்தியும் மாயாண்டிபட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வயல் வெளியில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன், ஒன்றிய செயலாளர் சேகர், தலைவர் தனசேகரன், முருகன் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேலூர் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

மேலும் செய்திகள்